வாசகர்களுக்கு........... நான் எழுதிய ” இறந்தபின்னும் இருக்கிறோமா?”, ”நிலவில் ஒருவன்” ஆகிய இரண்டு நூல்களும் கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நூல்களை வாங்க விரும்பும் வாசகர்கள் உயிர்மை பதிப்பகத்தைத் தொடர்புகொள்ளவும்.

content protection

October 28, 2015

விர்கா - நனைக்கா மழை

மழையில் குடையில்லாமல் நிற்கும்போது நனையாமல் இருக்கமுடியுமா?

"குடையில்லாவிட்டால் என்ன, மழைக்கோட்டுடனோ, மரங்களின் கீழோ, வாகனத்தினுள்ளோ இருந்தால் ஏன் நனைய வேண்டும்?" என்று எதிர்க் கேள்விகள் கேட்பீர்கள்.

நான் கேட்பது, "நேரடியாகவே மழைபெய்யும்போது அதன் கீழ் நின்றால் நனையாமல் இருக்க முடியுமா?"

முடியும். சோவெனப் பெய்யும் மழையில் கீழ், நனைவோம் என்று நினைத்து நாம் நின்றால், நனையவே மாட்டோம்.

மழை பெய்யும்..... ஆனால், பெய்யாது....

நம்மை நனைக்காமல் பெய்யும் மழையொன்று உண்டு என்பது உங்களுக்கு தெரியுமா? அந்த மழைக்குப் பெயர் 'விர்கா' ((Virga). மீண்டும் சரியாகப் படித்துக்கொள்ளுங்கள். வயாக்ரா அல்ல விர்கா.


'விர்கா' என்னும் மழையின் நீர்த்துளிகள் நிலத்தை வந்தடைவதற்கு முன்னர் காற்றுவெளியிலேயே ஆவியாகிவிடுகின்றன. அதன் எந்தவொரு துளியும் நிலத்தில் விழுவதில்லை. அல்லது அதை இப்படியும் சொல்லலாம். மழை பெய்யும்போது, மழைத்துளிகள் நிலத்தை அடைவதற்கு முன்னரே ஆவியாகினால் அந்த மழையை 'விர்கா' என்பார்கள்.

குறைந்த ஈரப்பதம் (Humidity), அதிக வெப்பம் ஆகியவை இருக்கும் சமயங்களில், சிறிய துளிகளாக உருவாகும் மழையே, நிலத்தை வந்தடைவதற்கு முன்னர் ஆவியாகிவிடுகிறது.

இனி யாராவது விர்கா மழையைச் சந்தித்தால் சொல்லுங்கள்.

-ராஜ்சிவா-


No comments:

Post a Comment