வாசகர்களுக்கு........... நான் எழுதிய ” இறந்தபின்னும் இருக்கிறோமா?”, ”நிலவில் ஒருவன்” ஆகிய இரண்டு நூல்களும் கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நூல்களை வாங்க விரும்பும் வாசகர்கள் உயிர்மை பதிப்பகத்தைத் தொடர்புகொள்ளவும்.

content protection

June 22, 2016

பூமியிலிருந்து விண்வெளிக்கு மிகவும் அருகாமையிலிருக்கும் மலைச் சிகரம்


இன்று விஜய் டிவியின் ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்வி என்னை மிகவும் ஆசரியத்துக்குள்ளாக்கியது. “எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும், அதை அறிந்துவைத்திருப்பது மிகவும் நல்லதில்லையா

கேட்கப்பட்ட கேள்வி இதுதான், “பூமியிலிருந்து விண்வெளிக்கு மிகவும் அருகாமையிலிருக்கும் மலைச் சிகரம் எது?” 


இந்தக் கேள்விக்கு அநேகமானவர்கள், ‘எவரெஸ்ட்’ என்றுதான் பதில் சொல்வார்கள். அபடித்தான் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பார்வையாளர்களில் பெரும்பான்மையானவர்களும் சொன்னார்கள். ஆனால் சரியான பதில், ‘ஷிம்பொரஸ்ஸோ’ (Shimborazo) என்பதுதான். 





'ஈக்வாடோர்' நாட்டில் அமைந்துள்ள இந்த மலை 6384 மீட்டர்கள் உரரமாக, பூமத்திய ரேகையின் ஒரு மேட்டுப்பகுதியில் அமைந்திருப்பதால், இதுவே விண்வெளிக்கு மிக அருகில் இருக்கும் மலைச்சிகரமாக இருக்கிறது. இந்த ஷிம்பொரஸ்ஸோ மலையானது ஒரு எரிமலை என்பது விசேச தகவல்.

-ராஜ்சிவா-