வாசகர்களுக்கு........... நான் எழுதிய ” இறந்தபின்னும் இருக்கிறோமா?”, ”நிலவில் ஒருவன்” ஆகிய இரண்டு நூல்களும் கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நூல்களை வாங்க விரும்பும் வாசகர்கள் உயிர்மை பதிப்பகத்தைத் தொடர்புகொள்ளவும்.

content protection

September 20, 2014

மழையில் நனையும் அறிவியல்



இப்போது நான் சொல்லப் போவது, ரொம்பப் பெருசா ஒன்னுமில்ல. சின்னத் தகவல்தான். உங்கள் அன்றாட வாழ்க்கையுடன் இணைந்த ஒரு சிறிய அறிவியல் தகவல். நம்ப முடியாமல் இருந்தாலும், உண்மையானது. கணிதச் சமன்பாடுகளால் நிறுவப்பட்டது.


மழை பெய்யும் போது, கையில் குடையில்லாவிட்டால் மழைபடாத ஓரிடத்தில் ஒதுங்கியிருப்பீர்கள். நீங்கள் செல்ல வேண்டிய இடம், ஐம்பது அடிக்கும் குறைவான தூரத்தில் உங்களுக்கு முன்னாலேயே இருக்கும். ஆனாலும் பெருமழையில் நனைந்து விடுவீர்கள் என்பதால், மழை விடும்வரை அல்லது குறையும்வரை காத்துக் கொண்டிருப்பீர்கள். சிறிது நேரத்தில், பெருமழை குறைந்து சிறுதூறலாகப் பெய்ய ஆரம்பிக்கும். காத்திருந்து பொறுமையிழந்ததால், அந்தச் சிறுதூறலிலேயே செல்ல வேண்டிய இடத்துக்கு ஓடிப் போய்விடலாம் என்று நினைப்பீர்கள். மழைக்குள் இறங்கி ஓடவும் செய்வீர்கள்.


ஆனால், மழையில் சிறு தூரங்களைக் கடக்கும் போது, ஓடிச் செல்வதைவிட நடந்து செல்லும் போதுதான் நாம் குறைவாக நனைவோம் என்பது உங்களுக்குத் தெரியுமா?


நாம் நினைத்துக் கொள்வது என்னவென்றால், "நடந்து செல்வதைவிட ஓடிச் சென்றால் மழையில் நனைவது குறைவாக இருக்கும்" என்பதுதான். மூளையும் அதுவே சரியாக இருக்கும் என்றுதான் எண்ணிக் கொள்ளும். ஆனால், நடந்து செல்லும் போது நம்மில் படும் மழைத்துளிகளை விட, ஓடிச் செல்லும் போதே அதிக மழைத்துளிகள் படுகின்றன.




September 2, 2014

பரிமாணங்கள்



நாம் இந்த உலகை, நமது இரண்டு கண்களால் பார்க்கும்போது, அது மிகவும் அழகான தோற்றத்தில் கண்களைக் கவர்கிறது. அதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், நாம் பார்க்கும் பொருளின் அல்லது காட்சியின் வடிவம்தான் அழகுக்கான மிகமுக்கியமான பங்கையெடுத்துக் கொள்கிறது. ஒரு பொருளின் வடிவம் அல்லது அமைப்பு என்பதை நாம் எடுத்துக் கொண்டால், அது இரண்டு வகைகளில் நம் கண்களுக்குத் தெரிகிறது. 1. இருபரிமாண வடிவவகை. 2.முப்பரிமாண வடிவவகை. அதாவது 2D (2Dimensions), 3D (3Dimension). இருபரிமாணங்கள், முப்பரிமாணங்களைப் பற்றி உங்களுக்கு அதிக விளக்கத்தை நான் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. காரணம் அவற்றை அன்றாட வாழ்க்கையில் நீங்கள் அடிக்கடி பார்த்தும், கேட்டும், பழகியும் கொண்டிருக்கிறீர்கள். ஆனாலும், ஒரு சிறியவகை விளக்கத்தை மட்டும் கொடுத்துவிட்டு மேலே செல்கிறேன்.


இருபரிமாணங்கள் (2D) என்பதற்கு உதாரணமாக, உயரம், அகலம் மட்டும் கொண்ட ஒரு புகைப்படத்தை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், முப்பரிமாணம் (3D) உயரம், அகலம் என்பவற்றுடன் நீளத்தையும் கொண்டது. நாம் கண்திறந்து பார்க்கும்போது தெரியும் அனைத்துக் காட்சிகளும் முப்பரிமாண வகையிலேயே நமக்குத் தெரிகின்றன. இந்த முப்பரிமாணத்தில் உள்ள ஒரு அறிவியல், தொழில்நுட்பச் சிக்கல் பற்றிச் சொல்வதுதான் இந்தப் பதிவு. சிக்கல் என்று சொல்வது சரியாவெனத் தெரியவில்லை. நுட்பமான புரிதல் என்று வேண்டுமானால் சொல்லலாம்.


மனிதர்களுக்கு இயற்கையாகவே இரண்டு கண்கள் அமைந்திருக்கின்றன. இது போலத்தான் மிருகங்களுக்கும், பறவைகளுக்கும் அமைந்திருக்கின்றன. ஆனால், மனிதனின் பார்வைதரும் காட்சி வேறு. மிருகங்கள்/பறவைகளின் பார்வைதரும் காட்சிகள் வேறு. அந்த வேறுபாடுகள் பலவிதங்களில் இருந்தாலும், ஒரு முக்கியமான விசயத்தில் எப்படி வேறுபடுகின்றன என்பதை மட்டும் பாருங்கள்.


மனிதனாகட்டும், மிருகமாகட்டும், பறவையாகட்டும், இவை அனைத்தும் ஒரேயொரு கண்ணால், எப்போதுமே இருபரிமாணக் காட்சிகளைத்தான் பார்க்கின்றன. உதாரணமாக உங்களுக்கு ஒரு கண் மட்டும் இருக்கும்பட்சத்தில், நீங்கள் இருபரிமாணக் காட்சிகளைத்தான் காண்பீர்களேயொழிய, முப்பரிமாணக் காட்சிகளையல்ல. இதைச் சரியாக நாம் புரிந்து கொள்ளவேண்டும். மனிதனுக்கு இரண்டு கண்கள் இருப்பதால்தான், அவன் முப்பரிமாணக் காட்சிகளைக் காண்கிறான். முப்பரிமாணக் காட்சிகளை இரண்டு கண்களாலும் காண்பதில் இன்னுமொரு விசேசமான நுட்பமொன்றும் இருக்கிறது. அந்த இரண்டு கண்களும், ஒரே காட்சியைக் காணவேண்டும். அப்படிக் கண்டால் மட்டுமே, நம்மால் முப்பரிமாணக் காட்சிகளாக உணரமுடியும். இதை இன்னும் கொஞ்சம் விளக்கமாகக் கூறினால், மனிதனின் வலது, இடது, கண்கள் இரண்டும், குறித்த இடைவெளிகளில் அமைந்து, ஒரே பொருளைக் குறிப்பிட்ட பார்வைக் கோணத்தினூடாகப் பார்க்கும்போது, முப்பரிமாணக் காட்சி நமக்குத் தெரிகிறது. இந்த இடத்தில்தான், மிருகங்களுக்கும்/பறவைகளுக்கும் மனிதனோடு வேறுபாடு வந்துவிடுகிறது. மனிதர்களையும், ஒருசில விலங்குகளையும் தவிர, ஏனையவற்றிற்கு பக்கவாட்டிலேயே கண்களிரண்டும் அமைந்திருக்கும். அதனால், அவற்றின் கண்களிரண்டும் வெவ்வேறு காட்சிகளையே ஒரே நேரத்தில் காண்கின்றன. “இதயவீண தூங்கும்போது பாடமுடியுமா, இரண்டு கண்கள் இரண்டுகாட்சி காணமுடியுமா?” என்ற கண்ணதாசன் எழுதிய பாடல்வரிகள் மிருகங்களுக்கும், பறவைகளுக்கும் சரிவராது என்பதுதான் நிஜம். எதிரிகளிடமிருந்து தம்மைப் பாதுகாக்கவே இப்படியொரு அமைப்பை இயற்கை அவற்றிற்குக் கொடுத்திருக்கின்றது. ஆனால், இப்படியொரு கண்ணமைப்பினால், கழுகு, பருந்து போன்ற சில பறவைகளைத் தவிர, ஏனைய மிருகங்கள், பறவைகளினால் முப்பரிமாணக் காட்சிகளைக் காணமுடியாது (வேறு சில விதிவிலக்குகளும் இருக்கலாம்).


சரி! இனி நாம் மீண்டும் மனிதர்களிடத்துக்கு வரலாம். இப்போது, நான் முன்னர் சொன்னதை மீண்டும் பாருங்கள். மனிதன் தன் ஒரு கண்ணால் இருபரிமாணக் காட்சிகளையே காணமுடியும். அது இடதுகண்ணாக இருந்தாலென்ன, வலதுகண்ணாக இருந்தாலென்ன, ஒரு கண்ணால் காணக்கூடியது இருபரிமாணங்கள் மட்டும்தான். ஆனால், ஒரேகாட்சியைப் (பொருளை) பார்க்கும்போது பெறப்படும், இரண்டு இருபரிமாண விம்பங்களை, ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கிவைத்து, மூளைதான் அந்தக் காட்சியின் முப்பரிமாணத்தைக் கணித்துக் கொள்கிறது. உண்மையைச் சொல்லப் போனால், நம் கண்கள் பார்க்கும் காட்சிகள் எதுவுமே முப்பரிமாணங்கள் கிடையாது. அவற்றை முப்பரிமாணமாகத் கணித்துத் திருத்திக் கொண்வது மூளைதான். இதை இலகுவில் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், இருபரிமாணமுள்ள சினிமாத்திரையில் காட்டப்படும் சினிமாப்படமொன்றைச் சாதாரணக் கண்ணாடியை அணிவதன்மூலமாக முப்பரிமாணமாக மாற்றிக்கொள்கிறோமல்லவா, அதுபோல.


மீண்டும் உண்மையில்லாத ஒன்றை, உண்மையென்று நம்பி, நாம் தோற்பது தெரியாமல் தோற்றுப் போகிறோம். நாம் முப்பரிமாணக் காட்சிகளைக் காண்பதாக நினைத்துக் கொள்கிறோம், அவ்வளவுதான். ஆனால் இது, ‘மூளை செய்யும் வேலை’.