வாசகர்களுக்கு........... நான் எழுதிய ” இறந்தபின்னும் இருக்கிறோமா?”, ”நிலவில் ஒருவன்” ஆகிய இரண்டு நூல்களும் கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நூல்களை வாங்க விரும்பும் வாசகர்கள் உயிர்மை பதிப்பகத்தைத் தொடர்புகொள்ளவும்.

content protection

November 10, 2014

பரிமாணங்களின் இரகசியங்கள்




உங்கள் வீட்டில் உங்களுக்கான அறையில் நீங்கள் உட்கார்ந்திருக்கிறீர்கள். அறையினுள் உங்களைச் சூழக் காற்றுவெளி மண்டலம் இருப்பது உங்களுக்குத் தெரியும். பூமியெங்கும் அந்த வளிமண்டலம் பரவியிருக்கிறது. அதுவே உங்கள் அறையில் பரவியிருந்தாலும், அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட்டிருக்க மாட்டீர்கள். சரி இப்போ நான் சொல்வதைக் கவனியுங்கள்.


உங்கள் அறையில், உங்களைச் சுற்றி, உங்கள் அருகிலேயே என்னென்ன இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்திருக்கவில்லை. அமெரிக்கா, கனடா, ஜப்பான், அவுஸ்ரேலியா, ஆபிரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, நோர்வே என உலகில் உள்ள அனைத்து நாடுகளும், ஏதோ ஒரு வடிவதில் உங்கள் அருகிலேயே இருக்கின்றன. அவையெல்லாம் மிகமிகச் சிறிய இடைவெளிகளில் அங்கு பரவியிருக்கின்றன. இப்போது நீங்கள் மொத்தமாகக் குழம்பியிருப்பீர்கள். ஆனாலும் ‘ nterstellar' படம் உங்களைக் குழப்பியதை விட அதிகமாக இருக்காது. சொல்லப் போனால், இந்தப் படத்தைப் பார்த்தவர்களுக்காகக் கொடுக்க விரும்பும் சிறு விளக்கத்திற்காகவே இந்தப் பதிவு. நான் இன்னும் நான் அந்தப் படத்தைப் பார்க்கவில்லை. ஆனாலும்…….


சரி மீண்டும் இங்கள் அறைக்குள் வருவோம்.........


அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா போன்ற உலக நாடுகளெல்லாம், ஏதோவொரு வடிவத்தில் உங்கள் அறையில் மிகமிக அருகிலேயே இருக்கின்றன என்று சொன்னேனல்லவா? இப்போது நீங்கள் ஒரு உலக வானொலிகளை உள்வாங்கக் கூடிய சிற்றலை வானொலியொன்றை (Shortwave Radio) அதிக விலை கொடுத்து வாங்கி வைத்திருக்கிறீர்களென்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த வானொலியில் ஒவ்வொரு அலைவரிசையாக மாற்றிக் கொண்டு வரும்போது, உலகமெங்குமுள்ள ஒவ்வொரு நாட்டின் வானொலியையும் நீங்கள் கேட்கக் கூடியதாக இருக்கும். இந்தச் செயற்பாட்டைக் கொஞ்சம் சரியாகச் சிந்தித்துப் பாருங்கள்.


‘இந்த' ஒவ்வொரு நாட்டின் அலை வரிசைகளும் எங்குமிருக்கவில்லை. உங்களுக்கு அருகில்தான் ஒன்றுடன் ஒன்று பக்கத்திலேயே இருந்திருக்கின்றன. நீங்கள்தான் அதைச் சரியானதொரு கருவிமூலம் ‘ட்யூன்’ செய்ததால் தனித்தனியாகக் கிரகித்துக் கொள்கிறீர்கள். ஒவ்வொரு நாட்டையும் பெற்றுக் கொள்ள அதற்கேற்ற கருவியொன்றுதான் உங்களுக்குத் தேவைப்படுகின்றது. ஒவ்வொரு நாடுகளும் குவாண்டம் அளவுகளில் அருகருகேதான் இருந்திருக்கின்றன.


இதுபோலத்தான், பரிமாணங்களும் (Dimention). நாம் புரிந்து கொண்ட மூன்று பரிமாணங்கள் (3D) தவிர்ந்து, ஏனைய ஏழு பரிமாணங்களும் உங்கள் அருகிலே, உங்கள் கூடத்தான் இருக்கின்றன. அவை அங்கிருப்பது உங்களுக்குத்தான் தெரியவில்லை. எப்போது அவற்றை ‘ட்யூன்’ செய்து கண்டுபிடிக்கக் கூடிய தகுந்த கருவியை மனிதன் கண்டுபிடிக்கிறானோ, அப்போது இந்த பரிமாணங்களின் இரகசியங்கள் மெல்லப் புரிந்து போகும்.


நன்றி: Michio Kaku





No comments:

Post a Comment