வாசகர்களுக்கு........... நான் எழுதிய ” இறந்தபின்னும் இருக்கிறோமா?”, ”நிலவில் ஒருவன்” ஆகிய இரண்டு நூல்களும் கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நூல்களை வாங்க விரும்பும் வாசகர்கள் உயிர்மை பதிப்பகத்தைத் தொடர்புகொள்ளவும்.

content protection

January 21, 2016

ஒன்பதாவது கோள்

நான் எழுதி வெளிவந்த என்னுடைய முதலாவது புத்தகம் 'எப்போது அழியும் இந்த உலகம்?'. இந்தப் புத்தகத்தில் மாயன்களின் வரலாற்றையும், உலக அழிவையும் பற்றி எழுதியிருக்கிறேன். அந்தப் புத்தகத்தின் ஒரு இடத்தில், 'நிபிரு' அல்லது 'பிளானெட் எக்ஸ்' (Planet X) என்ற ஒரு கோளைப்பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். இந்தக் கோளை, 'IRAS' (Infra Red Astronomical Satellite) என்னும் இன்ஃபிரா சிவப்புக் கதிர்களின் மூலமாக இருளில் இருக்கும் கோள்களைக் கண்டுபிடிக்கும் சாட்லைட் மூலமாக நாஸா கண்டுபிடித்தது என்றும், ஆனால் ஏதோ காரணங்களினால் அந்தத் தகவலை நாஸா மறைத்துவிட்டது என்றும், அந்தத் தகவலை 'நியூ யோர்க் டைம்ஸ்', 'வாஷிங்டன் போஸ்ட்' ஆகிய பத்திரிகைகளும் எழுதியிருக்கின்றன என்று எழுதியிருக்கிறேன்.




அத்துடன், 5000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர்களென்று கருதப்படும் சுமேரியரின் கற்சித்திரமொன்றில், சூரியனைச் சுற்றி அதன் கோள்கள் அனைத்தையும் வரைந்துவிட்டு, கடைசியாகப் பூமியைவிடப் பெரிய கோளொன்றும் சூரியனைச் சுற்றிவருவதாக அதில் வரைந்திருக்கிற. சூரியக் குடும்பத்தில் இல்லாத ஒரு கோளை, நிலையில், சுமேரியர் ஏன் தங்கள் சித்திரத்தில் வரைந்தார்களென்று தெரியவில்லை. அந்தக் கோளுக்குச் சுமேரிய மொழியில் 'நிபிரு' என்றும் பெயரிட்டிருந்திருக்கிறார்கள். இவையெல்லாவற்றையும் அதாவது, சுமேரியரியரின் இந்தக் கற்சித்திரம் பற்றியும், நிபிரு பற்றியும் என் புத்தகத்தில் விரிவாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.




நேற்று மிகப்பெரிய ஆச்சரியமொன்று நடந்திருக்கிறது. புதிய செய்தியொன்று அறிவியல் உலகத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. 'கான்ஸ்டண்டைன் பாடிஜின்' (Konstantin Batygin), 'மைக் பிரவுன்' (Mike Brown) என்னும் இரு ஆராய்ச்சியாளர்கள் புளூட்டோவுக்கு அப்பால், சூரியக் குடும்பத்தின் கடைசி எல்லையில், வெகு தூரத்தில் ஒரு புதிய கோளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்தக் கோளும் சூரியக் குடும்பத்திற்குச் சொந்தமானதுதான். அதாவது இந்தக் கோள், சூரியனைத்தான் சுற்றி வருகிறது. அது சூரியனைச் சுற்றிவர எவ்வளவு காலம் எடுக்கிறது தெரியுமா? 10,000 இலிருந்து 20,000 ஆண்டுகள் எடுக்கின்றனவாம். ஆண்டுகள் சரியாக இன்னும் கணிக்கப்படவில்லை. அவ்வளவு தூரத்தில் இந்தக் கோள் இருக்கிறது. இந்தக் கோள் பூமியைவிடப் பத்து மடங்கு பெரியது. இதுவும் வியாழன் போல வாயுவால் உருவான ஒரு கோள்தான். புளூட்டோ ஒன்பதாவது கோள் என்னும் இடத்தைத் தவறவிட்டதால், இந்தக் கோள், சூரியனின் ஒன்பதாவது கோளாக எடுக்கப்படுகிறது. அதனால், இந்தல் கோளுக்குத் தற்காலிகமாக 'ஒன்பதாவது கோள்' (Planet Nine) என்று பெயரிட்டிருக்கிறார்கள். இந்தக் கோளை, கணித மாடல்களின் மூலம் கணித்துத்தான் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஒரு தொலைநோக்கிக் கருவியால் இதைக் கண்டுபிடிப்பது என்பது மிகவும் சிரமமான செயல். காரணம் இருட்டு. கும்மிருட்டில், புட்பால் மைதானத்தில் குன்றிமணியொன்றைக் கைகளால் தடவித் தேடுவதுபோன்ற செயல் இது. ஆனாலும் விரைவில் தொலைநோக்கி மூலம் கண்டுபிடித்து விடுவோமென்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.






இவையெல்லாம் ஒருபுறமிருக்கு, 5000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த சுமேரியர்களுக்கு இந்தக் கோள்பற்றி எப்படித் தெரிந்தது? யார் இவர்களுக்கு இந்தத் தகவலை எடுத்துச் சொன்னது? இன்றைய நவ்ன அறிவியலால் கூடக் கண்டுபிடிக்க முடியாத ஒரு கோளைச் சுமேரியர்கள் குறிப்பிட்டிருப்பது ஆச்சரியமில்லையா? இங்கு சுமேரியர் பற்றி மேலதிகமான ஒரு கொசுறுச் செய்தியையும் நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும். சுமேரியரின் கடவுளான 'அனுனாக்கி' வேறு யாருமில்லை, நம் சிவபெருமான்தான் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.


சுமேரியர்கள் பற்றியும் அட்லாண்டிஸ் பற்றியும் ஒரு நீண்ட தொடர் எழுத விருப்பமுண்டு. சரியான களம் கிடைக்கும்போது எழுதுகிறேன்.


-ராஜ்சிவா-


No comments:

Post a Comment